For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணைக் கட்டிப் பாட்டுப்பாடி அரசு மருத்துவர்கள் நூதனப் போராட்டம்!

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைய கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவர்கள் கண்களை கட்டிக்கொண்டு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சிவகங்கை: அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், உயர்கல்வியில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு பாட்டுப்பாடி நூதனப் போராட்டம் நடத்தினர்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், உயர்படிப்புக்கு விண்ணபிக்கும் போது அவர்களுக்கு 50 சதவித இடஒதுக்கீட்டை அரசு வழங்கி வந்தது. இந்த இடஒதுக்கீடு கடந்த 30 வருடங்களாக நடைமுறையில் உள்ளது.

 Doctors protest in Sivaganga to revive reservation

ஆனால், அரசு சட்டென்று அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்த காரணத்தால்,பலநூறு அரசு மருத்துவர்கள் மேல்படிப்புக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுவர்.

இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலுள்ள மருத்துவர்கள் கடந்த 20ஆம் தேதியிலிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்களைக் கட்டி பாட்டுப்பாடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary
Resevation in higher studies for government doctors was cancelled and doctors are stage protesting in different ways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X