அம்பேத்கரின் 127வது பிறந்த நாள்.. கோலாகல கொண்டாட்டம்.. முதல்வர், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதே போன்று கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.

தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட மேதை அம்பேத்கரின் உருவ சிலைக்கு அண்மையில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற இந்திரா பானர்ஜி மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

சென்னை துறைமுகம் பகுதியில் அம்பேத்கர் படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஓபிஎஸ் டீம்

ஓபிஎஸ் டீம்

கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்ட ஏராளமானோர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.

தொடரும் மரியாதை

தொடரும் மரியாதை

மேலும், சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் ஜெயக்குமார், சமத்துவ கட்சித்தலைவர் சரத்குமார், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN CM Edapadi Palanisamy and other political leader paid tribute to Dr. Ambedkar on his 127th birthday in Tamil Nadu.
Please Wait while comments are loading...