For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை காமராஜர் பல்கலை.யின் 16வது துணை வேந்தராக செல்லத்துரை பதவி ஏற்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் 16வது துணைவேந்தராக செல்லத்துரை பொறுப்பேற்றார்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக இப்பல்கலை முன்னாள் பேராசிரியர் செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இப்பல்கலை துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் பதவி காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்ததது.

 Dr.Chelladurai take charge of mku

இதற்காக முன்னாள் கவர்னர் ரோசய்யா, பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் தேடல் குழு அமைத்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பரிசிலித்து மூன்று பேர் பட்டியலை தற்போதைய கவர்னர் பொறுப்பு வித்யாசாகர் ராவிடம் அளித்தது. இதில் செல்லத்துரை தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் இப்பல்கலையில் 16வது துணைவேந்தராக நேற்று மாலை அவர் பதிவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும் இடம் பெறும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்படும்.

2012 ஆம் ஆண்டு ஆய்வின் படி 9 வது இடத்தில் இருந்த பல்கலைக்கழகம் தற்போது 77வது இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடத்துக்கு கொண்டு வர பாடுபடுவேன். அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கணிணி கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். பல்கலையில் வெளிப்படையான நிர்வாகம் செயல்படும். மாணவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். வளர்ச்சிக்கு நிதி ஆதாரம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

English summary
Dr.Chelladurai take charge vice-Chancellor of Madurai Kamaraj University
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X