கம்யூனிஸ்ட் கட்சி விழாவில் தமிழிசை.. நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு!
சென்னை: சென்னையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமைக் குழுவின் புதிய அலுவலக கட்டடத் திறப்பு விழாவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.
நேற்று நடந்த அந்த நிகழ்ச்சியை டாக்டர் தமிழிசை அழகாகப் பதிவு செய்துள்ளார்.
அந்த நெகிழ்ச்சிப் பதிவு.. டாக்டர் தமிழிசையின் வரிகளில்...

கட்சி எல்லை கடந்து
இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகக் கட்டிட திறப்பு விழா சென்றிருந்தேன்...கட்சி எல்லை கடந்து கட்டிட திறப்புவிழாவிற்கு வந்திருந்தனர் தலைவர்கள்..

மாறுபட்ட தலைவர்களுடன்
கனமான விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் தவைர்களுடன் கனிவான தருணங்களை பரிமாறிக் கொண்டது.. மாறுபட்ட கொள்கையுடைய தவைர்களுடன் மாசுபடாத அன்பைப் பரிமாறிக் கொண்டது ஓர் மாறுபட்டஅனுபவமே.

பாசத்துடன் வரவேற்ற நல்லகண்ணு
அன்புடன் வரவேற்ற பெரியவர் தா.பாண்டியன், சகோதரர் மகேந்திரன், மருத்துவக் கல்லூரி தோழர் டாக்டர் ரவீந்திரன் பாசத்துடன் வரவேற்ற பெரியவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள்...பாராட்டுடனும் வரவேற்றார்...

விமரிசையான விவாதங்கள்
ஆம்... எங்களையே விமர்சித்தாலும் விமரிசையாக உள்ளது உங்கள் விவாதங்கள் என்றார்... அகில இந்திய செயலாளர் டி.ராஜா அவர்களின் நல்ல உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது..

அப்பாவுடன் அன்று.. மகளுடன் இன்று
என்னைக் கண்டதும்... அப்பாவுடன் (குமரி அனந்தன்) விவாதித்த நாங்கள் இன்று மகளோடு விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.. தங்களின் விவாதங்கள் காரமாக இருந்தாலும்.. கருத்துடனேயே இருக்கிறது என்றார்..

Tamilisai Soundararajan
பரபரப்பான சூழலிலும் பரந்த மனதுடன் பரிமாறப்பட்டன கருத்துக்கள்.. நிகழ்ச்சியில்...ஐயா நெடுமாறன் அவர்கள் செளந்தரராஜன், டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் பலராமன், கனகராஜ் போன்றோரைச் சந்தித்ததும் மகிழ்ச்சி... கட்சிக் கட்டுப்பாடுகளைக் கடந்திருந்த கட்டிட நிகழ்ச்சி என்று கூறியுள்ளார் தமிழிசை.