சென்னையில் பரபரப்பு.. அதிகாரிகள் அதிரடி ரெய்டில் அள்ள, அள்ள கிடைத்த ரூ.71 கோடி போதை மருந்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: செங்குன்றத்தில் கிலோ கணக்கில் 3 வகையிலான போதைப்பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைபற்றியுள்ளனர்.

மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 25 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

 Drugs worth Rs.71 crores seized ar Thiruvallur's Redhills area

செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் அந்த தனியார் கிடங்கில் வெளிநாடுகளுக்கு துணியை வடிவமைத்து கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று அவற்றை பேக்கிங் செய்யும் பணியும் அந்தத் தனியார் கிடங்கில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது வரை நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ மெத்தா பெட்டமைன், 90 கிலோ ஹெராயின், 56 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருள் குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென்இந்தியாவிலேயே அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இவை தான். ஹெராயின் என்பது வழக்கமான போதைப்பொருளாக இருந்தாலும் மற்ற 2 போதை வஸ்துகளும் பார்ட்டிகளுக்காக பயன்படுத்தப்படுபவை. இது போன்ற உயர் ரக போதைப்பொருட்கள் இங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, வெளிநாடுகளுக்கு மறைத்து அனுப்பப்படுகிறதா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதோடு, இதில் மேலும் பலரை இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுவரை மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 9 பேரிடம் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
High seizure of heroine, bettamine and sudopetrin seized at Thiruvallur District's Redhills area shocked the officials.
Please Wait while comments are loading...