பொருட்கள் தட்டுப்பாடு இல்லையா.. ரேஷன் கடைக்கு வர்றீங்களா.. அமைச்சர்களுக்கு துரைமுருகன் சவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் பொருட்கள் வழங்குவதில் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்ன அமைச்சரிடம், ரேஷன் கடைக்கு வந்து நிரூபிக்க தயாரா என துரைமுருகன் சட்டசபையில் சவால்விட்டுள்ளார்.

சட்டசபைக் கூட்டத்தில் இன்று, ரேஷன் கடைகளில் சரி வர பொருட்கள் கிடைக்கவில்லை என்று திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் குற்றம்சாட்டி பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

Durai Murugan challenges minister Kamaraj

அமைச்சரின் பேச்சில் இடைமறித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்எல்ஏக்களுடன் ரேஷன் கடைகளுக்கு அமைச்சர்கள் வந்து பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என்பதை நிரூபிக்கத் தயாரா என்று சவால் விட்டார்.

தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ள நிலையில், சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அளித்துள்ள பதில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ministers come with DMK MLAs to Ration Shops, said Durai Murugan in assembly today.
Please Wait while comments are loading...