For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தல்: ரேஷன் பொருட்கள், பேருந்துகளில் ஜெ., படம் போட தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

E C to enroll new voters in colleges
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்கள் மீது முதல்வர் ஜெயலலிதா உருவபடம் பொறிக்க கூடாது என்று அரசு செயலாளர்கள் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் சிறை தண்டனை கிடைக்கும் என்பதை வாக்காளர்களுக்கு வலியுறுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடத்த அனைத்து துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். குறிப்பாக தகுதி உள்ள வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதுடன், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களை ஓட்டு போட வைப்பது, ஓட்டு போட வருபவர்கள் அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை தடுப்பது ஆகிய 3 பணிகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் தவறான கலாசாரத்தை கொண்டு வருவதையும் முற்றிலுமாக தடுக்க வேண்டும். குறிப்பாக விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் பகுதிகளிலேயே ஓட்டு போட உரிமை உள்ளது. இதனை கல்லூரி நிர்வாகங்கள் அதனை மாணவர்கள் மத்தியில் எடுத்து சென்று ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.

வாக்காளர் தினம்

மேலும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் கொண்டாட வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் அட்டைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படங்கள் இருப்பதை மறைக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என்றார்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், கூறியதாவது:-

அரசு உயர் அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில், ஓட்டு போட பணம் வாங்க கூடாது என்பதை வாக்காளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஒவ்வொரு துறையும் இந்த கருத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வலியுறுத்தப்பட்டது. இதனை கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்,) மாணவர்கள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அதுவும் வாக்காளர் தினமான வரும் 25ம்தேதி முதல் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஓட்டுக்கு காசு

வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வருவதுடன், எந்தவித அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல், சுயசிந்தனையுடன், தைரியமாக சென்று வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் எந்தகாரணத்தை கொண்டும் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வாக்கை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் சிறை தண்டனை என்பதையும் வலியுறுத்த உள்ளோம். வாக்களிக்க விரும்பவில்லை என்றால், எப்படி வாக்குபதிவு எந்திரத்தில் பதிவு செய்வது என்பதையும் தெரிவிக்க உள்ளோம் என்றார்.

English summary
Chief electoral officer Praveen Kumar on Wed­nesday said the Election Commission planned to appoint a campus ambassador in each of the 1,050 colleges in the state to help students enrol new voters in the electoral rolls in their institution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X