For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூனியமாகிறதா சசிகலா, தினகரனின் அரசியல் எதிர்காலம்? டெல்லியில் நாளை பரபர விசாரணை

இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலாவின் நியமனம் தொடர்பாக நாளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லுமா? என்பது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவில்தான் சசிகலா, தினகரனின் அரசியல் எதிர்காலம் தெரியவரும்.

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரியது. இதற்கு சசிகலா அணி எதிர்ப்பு தெரிவித்தது.

இரு கட்சிகளாக உடைந்தன

இரு கட்சிகளாக உடைந்தன

இதையடுத்து அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) ஆகிய இரு கட்சிகளுக்கு அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம்.

8 வார அவகாசம்

8 வார அவகாசம்

இதனிடையே நாளை இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கபட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையை ஒத்தி வைக்கும் நோக்கத்தில் சசிகலா கோஷ்டி 8 வார கால அவகாசம் கேட்டிருக்கிறது.

சசி குடும்பம் ஒதுக்கி வைப்பு?

சசி குடும்பம் ஒதுக்கி வைப்பு?

தற்போது அதிமுக இரண்டு அணிகளும் ஒன்றாக இணைவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய விசாரணை

முக்கிய விசாரணை

அதிமுகவில் அடுத்து என்ன புயல்... எந்த தியான வடிவத்தில் வெடிக்கும் என தெரியாத நிலை உள்ளது. இச்சூழ்நிலையில் டெல்லியில் நாளை நடைபெறும் தேர்தல் ஆணையத்தின் விசாரணை சசிகலா, தினகரனின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

English summary
The Election Commission will examine the Sasikala's appointments as ADMK General Secretary and freeze of Two Leaves symbol issues on Tomorrow in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X