அன்னிய செலாவணி மோசடி: முன்னாள் அமைச்சர் கோசி. மணியின் மகன் அன்பழகன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கோசி. மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் கோசி. மணியின் மகன் அன்பழகன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு நாடுகளில் இருந்து கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதாகக் கூறி அங்கு போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் ரூ. 80 கோடி பணத்தை தன்னுடைய கணக்கிலேயே சேர்த்துள்ளார் அன்பழகன்.

ED arrested Ko.Si.Mani's son Anbazhagan at Chennai

ஆனால் கணக்கு காட்டியது போல எந்த உபகரணங்களும் வாங்கி இறக்குமதி செய்யப்படவில்லை என்பதோடு இல்லாத நிறுவனங்களுக்கு பணத்தை அனுப்பி தன்னுடைய வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளார். சுங்க இலாக்காத்துறை

Minister Anbazhagan insulting Actor Kamalhassan-Oneindia Tamil

இந்தியா முழுவதும் இது போன்ற நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே லியாகத் கான் என்ற தொழிலதிபர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அன்பழகன் குறித்து சுங்க இலாக்கத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ED arrested DMK Ex minister Ko.Si.Mani's son Anbazhagan who transfereed money illegally to his account by means of FERA caught after investigations.
Please Wait while comments are loading...