எம்ஜிஆர் சிலைக்கு பூட்டு போட்ட எடப்பாடி டீம்.. டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் குரூப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தருமபுரி: எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியினர் போட்ட பூட்டை தினகரன் அணியினர் டூப்ளிகேட் சாவி போட்டு திறந்துள்ளனர்.

அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி அணியினர் மாலை அணிவித்தனர்.

Edappadi palanisami team locked MGR statue in Arur

பின்னர் சிலையை சுற்றியுள்ள பாதுகாப்பு கதவை பூட்டு போட்டுச்சென்றனர். இதைத்தொடர்ந்து தினகரன் குரூப்பைச் சேர்ந்தவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது பூட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர்கள் டூப்ளிகேட் சாவி போட்டு பாதுகாப்பு கதவை திறந்து மாலை அணிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Edappadi palanisami team locked MGR statue in Arur. But TTV Dinakaran team opened the lock with the fake key.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற