மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு காரணம் இதுதான்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள்

  சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்திற்கு மின்கசிவே காரணம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின.

  மேலும் கிழக்கு கோபுர பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. அந்தப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் சிலைகள் கருகின. 5-க்கும் மேற்பட்ட தூண்கள் கீழே சாய்ந்தது.

  மாற்று இடம்

  மாற்று இடம்

  இந்த பயங்கர தீ விபத்துக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகள் காரணம் என்று கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்ட கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கியது. ஆனால் கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களுக்கு மாற்று இடம் தந்தால் உடனடியாக காலி செய்வதாகவும் கூறினர்.

  காரணம் இதுதான்

  காரணம் இதுதான்

  இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்திற்கு மின்கசிவே காரணம் என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக ஆய்வுக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது மின்வாரிய அதிகாரிகளை அழைத்து கோயிலில் உள்ள அனைத்து மின் சாதன பொருட்களின் உறுதிதன்மையை ஆய்வு செய் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

  கடைகள் அகற்றம்

  கடைகள் அகற்றம்

  மேலும் பேசிய அவர், தமிழக கோயில்களை சுற்றியுள்ள கடைகளை அகற்றும்படி அறநிலையத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் முறையான அனுமதியோடு அனைத்து கடைகளை அப்புறப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

  அனுமதி தேவை

  அனுமதி தேவை

  அரசு நிலத்தில் கோயில்கள் இருந்தால் அகற்றும் அரசு, கோயில் நிலத்தில் அரசு கட்டிடங்கள் இருந்தால் அகற்றுமா என்ற எச்.ராஜாவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அனுமதியுடன் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை ஒன்று செய்யமுடியாது என்றும், அனுமதியில்லாத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Electrical discharge is the reason for Madurai temple Fire says Minister Sevoor ramachandran. And also he added that shops near the temple will be evacuated soon

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற