For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்

Google Oneindia Tamil News

நெல்லை: தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஓரு மணி நேரத்திற்கு முன்பாக மாதிரி வாக்கு பதிவு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதட்டமான வாக்கு சாவடிகளில் கூடுதல் போலீசாரும், துணை ராணுவ படையினரும் நிறுத்தப்படுகின்றனர்.

Everything is ready for election polling in Nellai - collector

நாளை தமிழக சட்டசபை தேர்தலுக்கன வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், பணப்பட்டுவாடா புகாரால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மட்டும் வாக்குப்பதிவு மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பட்டு, வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பூத் ஸ்லிப் இல்லாதவர்கள், மொபைல் போனில் 1950 என்ற என்றுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால், தங்களுக்கு வாக்குச்சாவடி பற்றிய தகவல்கள் அனுப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

11 ஆவணங்கள்

பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மத்திய மாநில அரசு பொதுத்துறை பொது நிறுவன கம்பெனி ஊழியர்கள் அடையாள அட்டை, வங்கி, அஞ்சல் புகைப்படத்துடன் கூடிய பாஸ் புத்தகம், பான் கார்டு, தேசிய பதிவேட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை, தொழிலாளர் அமைச்சகம் மூலம் வழங்கப்பட்ட சுகாதார ஆயுள் காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் அலுவலரால் வழங்ப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீ்ட்டு, நாடாளுமன்ற, மேலவை உறுப்பினர்களால் வழங்கப்பட்ட ஆளறியும் அட்டை ஆகியவையும் காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Everything is ready for election polling in nellai- collector
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X