டிடிவி தினகரனை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.. முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து டிடிவி தினகரனை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.

மதுரை மேலூரில் நாளைத் தினகரன் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தினகரனுக்கு பக்கபலமாக முன்னாள் இன்னாள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

Ex-Minister Palaniyappan visits Mellur

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின்னர் பழனியப்பன், அதிமுகவை பொறுத்தவரை துணைப் பொதுச் செயலாளரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் 27 பேர் கொண்ட குழுதான் இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் ஆவேசமாகக் கூறினார்.

மேலும், அதிமுக என்பது ஒரு நிறுவனமோ அல்லது குடும்பமோ அல்ல என்றும் அதிமுகவில் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையை உணர்ந்து தான் கட்சி செயல்பட வேண்டும் என்றும் கூறிய பழனியப்பன், முதல்வர் பழனிச்சாமி எடுத்திருக்கும் முடிவு தவறானது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran supporter Palaniyappan has visited Mellur, where public meeting will be held tomorrow.
Please Wait while comments are loading...