மதுகொடுக்க மறுத்த அரசைக் கண்டித்து ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு சூளை பகுதியில் முன்னாள் ராணுவத்தினர் தங்களுக்கு மது வழங்கப்படவில்லை என கூறி குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

ஈரோடு சூளை பகுதியில் முன்னாள் ராணுவத்தினருக்கு மது வழங்கும் கேண்டீனும் டாஸ்மாக்கும் இணைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் வைக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்த பிறகு ராணுவத்தினர் கேண்டீன் டாஸ்மாக்குடன் இணைக்கப்பட்டதும்,முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கும் மது வகைகள் வழங்கப்படவில்லை.

 Ex. Service men protested in Erode not being given liquor to them

இதனால், கோபமடடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள், நாட்டுக்காக உழைத்த எங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் சலுகைதான் மதுபானம். அதற்கும் டாஸ்மாக் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு மது வழங்க மறுப்பது எங்களுக்கான உரிமைகளை மறுப்பது போலாகும். ஆகையால், மாநில அரசு உடனே எங்களுக்கு மது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

முன்னாள் ராணுவத்தினர் ஈரோடு - மைசூர் நெடுஞ்சாலையில் குடும்பத்தினருடன் நடத்திய போராட்டத்தால் அப்ப்குதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex. service men protested in Erode not being given liquor to them by the state government. After police had a talk with them they gave up the protest.
Please Wait while comments are loading...