அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... விண்ணப்பிக்காதவங்க பயன்படுத்திக்கோங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பம் அளிக்க இன்று கடைசி நாள் என்பதால் 2வது சனிக்கிழமை என்ற போதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இன்று அதிகமானோர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கையில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Extended time period to get subsidy for two wheeler ends today

மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் 22ந்தேதி முதல் மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் இலக்கான 1 லட்சம் விண்ணப்பங்களை அடையவில்லை என்பதால் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகசாசம் 10ம் தேதி அதாவது இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் ஸ்லுட்டர் பெற ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்பதால் கடந்த சில நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க இன்றுடன் அவகாசம் முடிவதால் தமிழகம் முழுவதும் 2வது சனிக்கிழமையிலும் விடுப்பு அளிக்காமல் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் மானிய விலை ஸ்கூட்டருக்காக விண்ணப்பித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 9,500 பேருக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu government's subsidy for two wheeler scheme extended time period ends today, even in 2nd saturday too corporation zonal offices, municipality offices were functioning.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற