For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”மலேசிய விமான மர்மத்தை காசாக்கும் இணையத்திருடர்கள்”

Google Oneindia Tamil News

சென்னை: வேகமாகப் பரவும் விமான வதந்தியால் மற்றவர்களின் சொந்த விவரங்களை திருடி காசாக்கும் இணைய திருடர்கள் காட்டில் கொண்டாட்டம்தான்.

இயற்கை பேரிடர், அசம்பாவிதமான சில நிகழ்வுகள் போன்றவை நிகழும்போது அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும்.

குறிப்பாக அந்த நிகழ்வுகளில் தொடர்பு டையவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அதுதொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள தினமும் கவலையுடன் ஏதெனும் வழி கிடைக்காதா என தவிப்பர்.அப்படிப்பட்டவர்களை குறி வைத்துதான் இந்த வியாபாரம் களை கட்ட துவங்கி உள்ளது.

விரல் நுனியில் உலகம்:

விரல் நுனியில் உலகம்:

இணையத்தின் வழியாக உலகம் விரல் நுனிக்கே வந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் இந்த ஆர்வத்தையும் , அக்கறையையும் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

மர்மமான மலேசிய விமானம்:

மர்மமான மலேசிய விமானம்:

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் மர்மமாக இருக்கும் மலேசிய விமானம் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு மணி நேரமும் வெவ்வேறு கோணங்களில் செய்திகளில் வெளிவருகின்றன.

பெர்முடாவில் சிக்கியதோ:

பெர்முடாவில் சிக்கியதோ:

இதற்கு நடுவே, பீதி கிளப்பும் வதந்திகளும் பொய்த் தகவல்களும் பரப்பப்படுகின்றன. ‘‘பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்துகிடக்கிறது. எனினும் பயணிகள் பத்திரமாக உள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள்'' என்ற பதிவை பேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பின்னணியில் கணினி வைரஸ்:

பின்னணியில் கணினி வைரஸ்:

வழக்கம்போல, "மால்வேர்" எனப்படும் கணினிகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மென்பொருள்களை உருவாக்கிப் பரப்பும் ஹேக்கர்களின் வேலைதான் இது. அதுவும் இந்த வீடியோவை பிபிசி, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி அந்த வதந்தியின் நம்பகத் தன்மையைக் கூட்ட ஹேக்கர்கள் முயல்கின்றனர்.

வீடியோ பார்க்க நிபந்தனைகள்:

வீடியோ பார்க்க நிபந்தனைகள்:

அந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் முதலில் அதைப் பகிர வேண்டும் என்றொரு நிபந்தனைக் கட்டளையையும் ஹேக்கர்கள் விதிக்கின்றனர். அத்துடன் அதைப் பார்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப திருட்டு:

தொழில்நுட்ப திருட்டு:

அதைப் பகிர்ந்தாலும் அதில் வீடியோ எதுவும் தெரிவதில்லை. தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் உச்ச நிலையில் இருக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையில் தரையில் நிற்கும் விமானத்தைக் கடலில் கிடப்பது போல் காட்டுவதற்கு பெரிய அளவிலான முயற்சிகள் தேவை இல்லை.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்:

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்:

எண்ணற்ற வீடியோ பதிவுகள் கொண்ட யூடியூப் வலைதளத்துக்குச் சென்று "சென்னை சுனாமி" என்று தேடிப்பார்த்தால், கடற்கரையில் அலையுடன் விளையாடும் இளைஞர்களின் வீடியோ கிடைக்கும். எனினும், சுனாமி அலைகள் கடைசி வரை கண்ணில் படாது. இதுபோல, பேய், வேற்று கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் போன்ற சிறப்பு சொற்களை பயன்படுத்தித் தேடிப்பார்த்தால், ஆயிரக்கணக்கில் வீடியோக்கள் கிடைக்கும். அத்தனையும் போலியாய் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இன்டர்நெட்டில் உஷார்!:

இன்டர்நெட்டில் உஷார்!:

ஆனாலும் இதை நம்பியோ அல்லது என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க விரும்பியோ குறிப்பிட்ட வலை தளங்கள் அல்லது பேஸ்புக் பதிவுகளுக்குச் செல்பவர்கள் பலர். அவர்கள் ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவதுடன் விஷயம் முடிந்து விடவில்லை.

உங்கள் சுயவிவரங்களை பறிகொடுக்காதீர்:

உங்கள் சுயவிவரங்களை பறிகொடுக்காதீர்:

இந்த விஷயத்தின் மறுபக்கத்தில் இணையத் திருடர்கள் பெருமளவிலான பணத்தை குவிக்கின்றனர். அதாவது "குறிப்பிட்ட வீடியோ வைப் பார்க்க வேண்டுமானால் உங்கள் சுயவிவரங்கள் வேண்டும். இது ஒரு கணக்கெடுப்பு. எனவே உங்கள் சுயவிவரங்களை சரிபார்க்க அனுமதி தரவும்" என்று விதிக்கப்படும் நிபந்தனைகளை நம்பி, வீடியோ பார்க்கும் ஆர்வத்தில் தகவல்களை அளித்தால் அவ்வளவுதான் நமது சுய விவரங்கள் அனைத்தும் பறிபோகும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட.

எச்சரிக்கை தேவை இணைய பயன்பாட்டில்:

எச்சரிக்கை தேவை இணைய பயன்பாட்டில்:

ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கறந்து விடுவார்கள். இந்தத் தகவல்களை வைத்துப் பெரிய அளவில் பணம் சம்பாதித்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மால்வேர் மென்பொருள் நிபுணர் கிறிஸ் பாய்டு எச்சரிக்கிறார்.

பரவும் வீடியோக்கள்:

பரவும் வீடியோக்கள்:

2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த நிலநடுக்கம் போன்ற பேரழி வுகள் தொடர்பாகவும் இதுபோன்ற வீடியோக்கள், ஒளிப்படங்களைக் கொண்ட பதிவுகளை வலைதளங்கள் படுவேகமாகப் பரவின.

பாஸ்வேர்ட் ஜாக்கிரதை:

பாஸ்வேர்ட் ஜாக்கிரதை:

இதுபோன்ற ஒளிப்பட பதிவுகளை சமூக வலைதளங்களில் "லைக்" செய்திருந்தாலோ, பகிர்ந்திருந்தாலோ அவற்றை அழித்து விடுவதுடன், கையோடு நமது பாஸ் வேர்டையும் மாற்றிவிடுவது நலம் என்று இணைய தள விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எச்சரிக்கின்றனர்.

English summary
A word of caution for all the social media Web sites users! 'Missing Malaysia Airlines Flight MH370 plane found in Bermuda Triangle' video has gone viral on facebook. This is nothing but a hoax leading to spread of malware. The links which appear to be telling the real story are reportedly fake links to fraud surveys listed by hackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X