கணவருக்காக மனைவி… மகனுக்காக சித்தி… அனல்பறக்கும் தமிழக தேர்தல் களம்
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசார களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வேட்பாளர்களுக்காக அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் வாக்கு சேகரிப்பது ஒருபுறம் இருந்தாலும், கணவருக்காக மனைவி, மகனுக்காக சித்தி என குடும்ப பெண்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கனிமொழி, பிரேமலதா போன்றவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாக தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவர் களைப்போல இல்லாவிட்டாலும், சில முக்கிய அரசியல் குடும்பத்துப் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கணவரின் வெற்றிக்காக குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் தெருத் தெருவாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

செல்வி கருணாநிதி
தயாநிதிமாறனுக்காக அவரது சித்தியும் கருணாநிதியின் மகளுமான செல்வி, மத்திய சென்னை தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆளுங்கட்சிக்கு எதிராக
‘நான் கலைஞரின் மகள் வந்திருக்கிறேன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அண்ணா நகர், என்.எஸ்.கே. நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி வாக்கு கேட்கிறார்.

பிரியா தயாநிதிமாறன்
மத்திய சென்னை திமுக வேட்பாளரான தயாநிதி மாறனின் மனைவி பிரியா, முதல்முறையாக தனது கணவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

1 ரூபாய்க்கு போன்
ஞாயிற்றுக்கிழமை கடும் வெயிலிலும் வில்லிவாக்கம் பகுதியில் தெருத் தெருவாக சென்று கணவருக்காக வாக்கு சேகரித்தார். இவர் மைக் பிடித்து பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், பெண்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு தனது கணவருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

சவுமியா அன்புமணி
தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா, தனது நாத்தனார் கவிதாவுடன் தொகுதி முழுவதும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

108 ஆம்புலன்ஸ்
தனது கணவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கிறார். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் கூறி தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அம்ரிதா மோகன் குமாரமங்கலம்
சேலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தின் மனைவி அம்ரிதா, உத்தரப்பிரதேச மாநிலம் லக் னோவில் இருந்து வந்து கணவருக்காக வாக்கு சேகரிக்கிறார்

உருது, இந்தியில் வாக்குசேகரிப்பு
தனது மாமனார் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கும் இவர், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி களுக்குச் செல்லும்போது உருது மொழியில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications