கள்ளக்குறிச்சியில் கலக்குறாரே டிராயிங் மாஸ்டர்.. விஜயகாந்த் விரலாலேயே.. "நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஓவிய ஆசிரியர் வரைந்த, ஓவியம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும், திரண்டு வந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா?
நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவாலாரன்ஸ் சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக விளங்கி வருகிறார். அந்தவகையில், மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை, பல வருட காலமாகவே விடாமல் செய்து வருகிறார்..

பிரத்யேகமான பாதுகாப்பகம் அமைத்துள்ளார்.. சேவையே கடவுள் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, அதன்மூலம் உதவிகள் தேவைப்படுவோருக்கு செய்து வருகிறார்..
அறக்கட்டளை: இந்த அறக்கட்டளையின் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர் 10 ஊர்களுக்கு ராகவாலாரன்ஸ் வழங்கியிருக்கிறார். அந்தந்த ஊர்களுக்கு வழங்கப்படும் இந்த டிராக்டர்களை, அந்தந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்..
சமீபத்தில் ஸ்வேதா என்ற மாணவி, ஒரு வீடியோ வெளியிட்டு ராகவா லாரன்ஸ் உடைய "மாற்றம் உங்கள் சேவை" வழியாக தனக்கும் உதவும்படி கேட்டிருந்தார்.. அந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ், உடனடியாக ஸ்வேதாவை நேரில் சந்தித்து பேசினார்.
பள்ளி மாணவி: ஸ்வேதாவுக்கு கால் ஊனமுற்றிருப்பதால், அதை குணப்படுத்த தேவையான வேலைகளையும், அதற்கான செலவையும் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டார்... அது மட்டுமல்லாமல் அந்த மாணவி பள்ளிக்கு நடந்து செல்லக்கூடாது என்பதற்காக, ஒரு வண்டியையும் பரிசாக வழங்கினார்... இந்தவீடியோவை ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் ராகவா லாரன்ஸ் சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவரும் ராகவா லாரன்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இந்த வாழ்த்தை ஓவியமாகவே வரைந்து ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
விஜயகாந்த்: "நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்" என்ற விஜயகாந்த் பாடலை குறிப்பிட்டு, அந்த பாட்டு வரிகளுக்கேற்றபடியே, பொட்டு வைத்து, ராகவா லாரன்ஸ் ஓவியத்தை அச்சு அசலாக வரைந்திருக்கிறார்..
இதில் சிறப்பு என்னவென்றால், பிரஷ் எதுவுமே பயன்படுத்தாமல், தன்னுடைய விரலிலேயே குங்குமத்தை தொட்டு "பொட்டு" வைத்து, ராகவா லாரன்ஸ் உருவத்தை வரைந்துள்ளார்.. அதுவும் வெறும் 5 நிமிடங்களில் வரைந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, விஜயகாந்த் உருவம்பொறித்த மோதிரத்தை அணிந்து கொண்டு, அந்த மோதிர விரலாலேயே "பொட்டு" வைத்து ஓவியம் வரைந்துள்ளார் செல்வம்.. இந்த ஓவியத்துக்கு தீபாராதனையும் காட்டினார்.
குங்குமம்: குங்குமத்தை தொட்டு தொட்டு பொட்டு வைத்து, லாரன்ஸ் உருவத்தை செல்வம் வரைய துவங்கியதுமே, அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து ஆசிரியர் செல்வத்தை வாழ்த்த துவங்கிவிட்டார்கள். இந்த பொட்டு ஓவியம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications