சாலை விபத்தில் தந்தை, மகள் பரிதாப பலி - வீடியோ
செட்டியூரில் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த அப்பாவும் மகளும் சாலைவிபத்தில் பரிபாதமாக பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: மேட்டூரை அடுத்துள்ள செட்டியூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் அப்பாவும் இரண்டு வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் செட்டியூரில் இருசக்கரவாகனத்தில் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகள் சரணிகா ஆகியோர் சென்றுகொண்டிருந்தனர். அபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மணிகண்டனும் அவரது இரண்டு வயது மகள் சரணிகாவும் அதே இடத்தில் பலியாகினர்.

அவருடைய மனைவி பலத்த காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications