இளம் வாக்காளர்களின் பரிசு "கோ பேக் மோடி" ஹேஷ்டேக்... உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ

  சென்னை : காவிரி வாரியம் அமைக்க மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்ட இளம் வாக்காளர்களால் கோ பேக் மோடி ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. தமிழகர்களின் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  காவிரிப் பிரச்னைக்காக தமிழர்கள் ஒன்றுதிரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று பிரதமர் சென்னை வந்திருக்கிறார். இதனால் மத்திய அரசின் மீது கோபத்தில் இருந்த தமிழர்கள் ஒன்று திரண்டு சென்னையை கருங்கடலாக மாற்றியுள்ளனர்.

  பிரதமர் செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தாலும், அந்தப் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கருப்புக்கொடி ஏந்தியும் ராட்சத கருப்பு பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் இளைஞர்கள் இன்று காலை முதல் கோ பேக் மாடி என்ற ஹேஷ்டெக்கை ட்ரெண்ட செய்ததன் விளைவாக இந்த ஹேஷ்டேக் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

  தெலுங்கராக பாராட்டுகிறேன்

  கோ பேக் மோடி ஹேஷ்டேகில் வலம் வரும் சில ட்வீட்கள் இதோ. தமிழர்களின் ஒற்றுமையை பார்த்து வியக்கிறேன். ஒரு தெலுங்கராக தமிழர்களின் உணர்ச்சி போராட்டத்தை பாராட்டுவதாக இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

  பிரதமர் வரவேற்புக்காக

  தமிழக மக்கள் பிரதமரை வரவேற்கத் தயாராக இருப்பதாக ஒரு படத்தை போட்டுள்ளார் இவர். அந்தப் படத்தில் சிலர் மறைந்து நின்று கொண்டு பிரதமர் வருகிறாரா என்று கையில் கற்களுடன் காத்திருப்பது போல பதிவிட்டுள்ளார் இவர்.

  மாற்றத்தை விரும்பும் இந்தியா

  1 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் என்பது சிரிக்கக் கூடிய விஷயமல்ல. முதல் தலைமுறை வாக்காளர்களின் வேதனை. இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் இளம் வாக்காளர்களின் பரிசு தான் இந்த கோ பேக் மோடி ஹேஷ்டேக் என்று பதிவிட்டுள்ளார் இந்த வலைபதிவர்.

  பறந்து கொண்டே இருக்கும் மோடிக்காக கறுப்பு பலூன்

  தமிழகத்தில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கறுப்புக் கொடிகள் மட்டுமல்ல கறுப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டுள்ளன. எதற்காகத் தெரியுமா எப்போதுமே மோடி பறந்து கொண்டு தான் இருப்பார் என்பதால் என கேலி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tear drops of first generation voters who voted to change in india...!!! Netizens trending go back India hastag number 1 not only in India but also in worldwide.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற