For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணிகளுக்கு முடிவுரை எழுதிய 2016!

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றுக்கு முடிவுரை எழுதிய ஆண்டாக 2106 இருந்தது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றின் எதிர்காலத்துக்கு முடிவுரை எழுதிய ஆண்டாக 2016-ம் ஆண்டு அமைந்தது.

2016-ம் ஆண்டு பிறக்கும் போதே தமிழகம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருந்தது.

பொதுவாக தமிழக தேர்தல் களங்களில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிகள் அமைவது வழக்கம். 2016 சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரையில் திமுக- அதிமுகவுக்கு மாற்று மற்றும் தனித்துப் போட்டி என்கிற குரல்கள் அதிகம் எதிரொலித்தன.

அமைச்சர்கள் அறிவிப்பு

அமைச்சர்கள் அறிவிப்பு

திமுக, அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அமைக்கப் போவதாக இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக இடம்பெற்ற மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி பிரகடனம் செய்தது. உச்சகட்டமாக யார் யார் அமைச்சர்? என்னென்ன துறைகள் என்றெல்லாம்கூட அறிவிக்கப்பட்டன.

 மதிமுகவில் பிளவு

மதிமுகவில் பிளவு

இந்த மெகா கூட்டணிக்கு மதிமுக, தேமுதிக, தமாகாவில் மிகக் கடும் எதிர்ப்பு எழுந்தது. மதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள் பலரும் திமுகவுக்கு திரும்பினர்.

 உடைந்த தேமுதிக, தமாகா

உடைந்த தேமுதிக, தமாகா

தேமுதிக சின்னாபின்னமாக சிதறிப் போனது. மக்கள் தேமுதிக உதயமானது. குட்டி கட்சியான தமாகாவும் சிதறு தேங்காயாகிப் போனது.

 திமுக- அதிமுக

திமுக- அதிமுக

தேமுதிகவை எதிர்பார்த்து ஏமாந்த திமுகவானது காங்கிரஸ், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதிமுகவோ மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை என மிக சிறிய கட்சிகளுடன் தேர்தல் களத்துக்கு போனது. பாமக தனித்தே போட்டியிட்டது. புதிய வரவாக நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் கண்டது. பாஜக தம் பங்குக்கு ஒரு அணி அமைத்து களம் கண்டது.

 ஆட்சியை தக்க வைத்த அதிமுக

ஆட்சியை தக்க வைத்த அதிமுக

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானதுதான் தாமதம்... தமிழக அரசியல் களத்தில் இருந்தே வாய்சவடால் பேசிய கட்சிகள் பல காணாமலே போய்விட்டன. அதிமுக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. திமுக இதுவரை இல்லாத வகையில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

 எதிர்காலத்தை தொலைத்த தேமுதிக, மநகூ

எதிர்காலத்தை தொலைத்த தேமுதிக, மநகூ

தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, நாம் தமிழர் அத்தனையும் படுபயங்கர தோல்வியைச் சந்தித்தன. சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அத்தனை இடங்களிலும் டெபாசிட்டை பறிகொடுத்தது. தமிழக அரசியலில் திமுக- அதிமுக என்ற திராவிட கட்சிகளை அசைத்துப் பார்க்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால் மக்கள் நலக் கூட்டணியும் சூனிய நிலைக்குத் தள்ளப்பட்ட சரித்திரத்தை எழுதியது 2016!

English summary
After the 2016 Tamilnadu Assembly Elections, DMDK and PWF lost their future in Tamilnadu politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X