சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது... இப்போது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது - ஓபிஎஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மழை வெள்ள நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

கடுமையான கனமழை பெய்ததால் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும், கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Flood situation control in Chennai Says OPS

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ''வடகிழக்குப் பருவமழை படிப்படியாக அதிகரிப்பது வழக்கமாகியுள்ள நிலையில், தொடக்கத்திலேயே மழை அதிக அளவில் பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு முன்னேற்பாடுகள் முழுமையாக தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

வியாழக்கிழமையன்று மழை 14 செ.மீ பதிவானது. ஆனாலும், வெள்ளம் பகலில் வடிந்துவிட்டது.
வெள்ளிக்கிழமையன்று கடுமையான கனமழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்தது. அதில் கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சென்னை நிலைமை கட்டுக்குள் உள்ளது.

நிவாரணம் உள்ளிட்ட பல்வெறு நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Northeast Monsoon Precautionary steps taken flood situation under control said Deputy CM O.Panneerselvam in Madurai

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற