For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் ஜெட்லிக்கு தோல்வி- ப.சிதம்பரம் எச்சரிக்கை

நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் அருண் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஜெட்லியின் தோல்வி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் அருண் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய பொது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட் என்று ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் கூறி வருகின்றனர்.

FM fails fiscal consolidation test: P.Chidambaram

இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் அருண் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஜெட்லியின் தோல்வி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், இந்த பட்ஜெட் 2019 தேர்தலை கொண்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ரயில் திட்டங்களை ஒரு வருடத்தில் நிறைவேற்ற முடியுமா? இது கார்ப்பரேட் அரசாங்கம் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட் பற்றி கருத்து கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்காது என்று கூறியுள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க பொருத்தமான திட்டங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
Responding on Union Budget 2018, former finance minister and Congress leader P. Chidambaram says the Modi govt has failed fiscal consolidation test and that will have serious consequences. FM fails fiscal consolidation test, this failure will have serious consequences says Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X