ஷூவை கழற்றிய ராகுல்... தன் செருப்பைக் கொடுத்து உதவிய 'ஏர்போர்ட்' நாராயணசாமி
புதுச்சேரி: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த ராகுல்காந்தி வெறும் காலுடன் சேற்றில் நடந்ததைப் பார்த்து முன்னால் மத்திய அமைச்சர் நாரயணசாமி தனது செருப்பை கொடுத்து உதவியுள்ளார். சேற்றில் ராகுல்காந்தி நிற்பது போலவும்,அவரது அருகில் செருப்பை கையில் பிடித்துக்கொண்டு நாராயணசாமி நிற்பது போலவும் புகைப்படங்கள் வெளியானது. இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியானது.
இந்த நிலையில் தான் தன்னுடைய செருப்பைத்தான் ராகுல்காந்தி கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார் மாஜி மத்திய அமைச்சர் நாராயணசாமி.

வடகிழக்குப் பருவமழைக்கு புதுவையும் தப்பவில்லை. சென்னை, கடலூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம் போல புதுவையும் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளானது. தமிழகம், புதுவையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று தனி விமானம் மூலம் வருகை தந்தார்
புதுச்சேரிக்கு விமானத்தில் வந்த ராகுல்காந்தி காரில் சென்று மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். அவர் அரியாங்குப்பம் சண்முகாபுரம் பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கால்களில் ஷூ அணிந்திருந்தார். அந்த ஷூ சேற்றில் வழுக்கியது. இதனால் அவர் மேற்கொண்டு நடக்க சிரமப்பட்டார்.
தனது ஷூவை கழற்றிவிட்டு நடக்க வெறும் காலில் நடக்க முயன்றார். அப்போது அவருடன் வந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி தான் அணிந்திருந்த செருப்பினை ராகுல்காந்தி அணிந்து கொள்ள வழங்கினார். அதன்பின் ராகுல்காந்தி நாராயணசாமியின் செருப்பை அணிந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது, இது குறித்து விளக்கம் அளித்துள்ள நாராயணசாமி, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த ராகுல்காந்தி எனது மாநிலத்தின் விருந்தினாராக வந்தார். அவர் சிரமப்படக்கூடாது என்றுதான் எனது செருப்பை அளித்தேன். இதனை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ராகுல்காந்தி நேரடியாக களத்தில் இறங்கி பார்வையிட்டார். பிரதமர் மோடியைப் போல ஹெலிகாப்டரில் பார்வையிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications