'லேப்டாப்'பை எடுத்திட்டு, 'டேப்லட்' போட்டு, 'தண்ணி' குடிச்சிட்டு கிளம்பினா.. "அம்மா!
சென்னை: சால்ட் முதல் சபாரி (டாடா சபாரி கார்) வரை என்று டாடா நிறுவன விளம்பரத்தைப் பார்த்துள்ளோம். தற்போது டாடாவை ஓரம் கட்டியுள்ளார் "அம்மா" ... அதாவது அம்மா திட்டங்கள்.
காலையில் சாப்பிடும் இட்லி முதல் ராத்திரி வீட்டுக்குத் திரும்ப பயன்படும் பஸ் வரை எங்கு பார்த்தாலும் "அம்மா" மயமாக மாறியுள்ளது தமிழகம்.
அம்மா திட்டங்கள் என்ற பெயரில் முதலில் வந்த திட்டம் அம்மா உணவகம். சென்னையில் ஆரம்பித்த அந்த உணவகத் திட்டம் பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டது. இன்று அம்மா என்ற பெயரில் பல திட்டங்கள் குவிந்து விட்டன.
ஆட்சி முடியப் போகும் தருவாயில் அதுகுறித்து ஒரு பார்வை பார்க்கலாம் வாங்க..!

அம்மா உணவகம்
மலிவு விலை உணவகம் இது. சென்னை மாநகராட்சியில்தான் முதன் முதலில் இது தொடங்கியது. 2013ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 15 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன.

அம்மா காட்டன் - ஜெயா காட்டன்!
அம்மா திட்ட வரிசையில் மாநில அமைச்சர் கோகுல இந்திரா மாஸ்டர் ஸ்டிரோக் அடித்த திட்டம் இது. அம்மா காட்டன் புடவை என்ற பெயரில் கோ ஆப்டெக்ஸ் மூலம் புதிய ரக சேலையை அவர் அறிமுகம் செய்தார். அம்மா காட்டன், ஜெயா காட்டன் என்ற பெயர்களில் இரண்டு சேலை ரகங்களை அவர் அறிமுகம் செய்தார். 2014ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இந்த சேலைத் திட்டம் தொடங்கியது.

அம்மா திட்டம்
பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட வருவாய்த் துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அம்மா திட்டம். 2013ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி இது அறிமுகப்படுத்தப்பட்டது.

அம்மா குடிநீர்
அக்வாபீனா, பிஸ்லெரி வரிசையில் பாட்டில்களில் தண்ணீர் அடைத்து அம்மா குடிநீர் என்ற பெயரில் ஒரு திட்டத்தை 2013ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ரூ 10க்கு இந்த வாட்டர் பாட்டில்கள் பஸ் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 304 விற்பனை மையங்களிலும், மாநிலம் முழுவதும் 268 பஸ் நிலையங்கள், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அம்மா மகப்பேறு சஞ்சீவி பொக்கிஷம்
கருவுற்ற தாய்மார்களின் உடல் நலனைப் பேணும் வகையில் 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற ஒரு முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இந்தத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார்.

அம்மா குழந்தைகள் நல பெட்டகம்
பச்சிளம் குழந்தைகளுக்கான திட்டம் இது. 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பெட்டகம் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. பச்சை நிற சூட்கேஸில் இந்தப் பொருட்களை வைத்து பிரசவித்த இளம் தாய்மார்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது கூடுதல் சுவாரஸ்யம். 2015ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தத் திட்டம் தொடங்க வைக்கப்பட்டது.

அம்மா மருந்தகம்
அம்மா மருந்தகம் என்ற பெயரில் தமிழகத்தில் மருந்துக் கடைகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. கூட்டுறவுத்துறை மூலமாக இந்த கடைகள் நடத்தப்படுகின்றன. 2014ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

அம்மா உப்பு
2014ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் அம்மா உப்பு. மூன்று வகையான, மலிவு விலை உப்பு பாக்கெட் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தொழில் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில், இவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அம்மா சிமென்ட்
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டம்தான் அம்மா சிமென்ட் திட்டம். 2015ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. சலுகை விலையில் சிமென்ட் வழங்கும் இந்த அம்மா சிமென்ட் திட்டமானது திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை 3 மாதங்களுக்கு முன்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதுதான் அவர் முதல்வர் பதவியில் இருந்தபோது கடைசியாக அறிவித்த அம்மா திட்டமாகும். அதன் பின்னர் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போய் விட்டார். இதனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

அம்மா அழைப்பு மையம்
இது சிறைக்குப் போய் திரும்பிய பிறகு ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா திட்டங்களில் ஒன்று. 2016ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் நேரடியாக பதிவு செய்யும் வகையிலான டெலிபோனிக் கேர் மையத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொளிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார். இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. இந்த நம்பரை எளிதாக மனதில் வைத்துக் கொள்ளலாம். எந்த இடத்தில் இருந்தும் இந்த நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ஆனால் நம்பர் பல சமயங்களில் கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.

20 லிட்டர் அம்மா குடிநீர் திட்டம்
இது அம்மா திட்டங்களின் வரிசையில் வந்த லேட்டஸ்ட் திட்டம். ஆட்சி முடியப் போகும் தருவாயில் தொடங்கப்பட்டுள்ளது இந்தத் திட்டம். 2016ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. பொதுமக்களுக்கு விலை ஏதுமின்றி ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும்.

மற்றும் பிற "அம்மா"
இவை மட்டுமா சுய உதவிக் குழு பெண்களுக்கு விலையில்லா அலைபேசி, அம்மா விதைகள் திட்டம், அம்மா சினிமா தியேட்டர் திட்டம், அம்மா காய்கறிக் கடை, விலையில்லா ஆடு மாடுத் திட்டம், விலையில்லா லேப்டாப் திட்டம் என மேலும் பல திட்டங்களை அம்மா அறிமுகப்படுத்தி அசத்தினார் கடந்த ஐந்து ஆண்டுகளில்... இதில் மறக்க முடியாத இன்னொரு திட்டம் ஸ்மால் பஸ் எனப்படும் சிற்றுந்து.. அதாவது திமுகவின் மினி பஸ்ஸுக்குப் போட்டியாக அரசு விட்ட பஸ் இது.
பார்க்கலாம்.. இந்த இலவசத் திட்டங்கள் எல்லாம் எந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் கை கொடுக்கும் என்பதை.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications