For Daily Alerts
Just In
இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் வீணை காயத்ரி

3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிப்பார் என்று அரசாணை கூறுகிறது. கடந்த வாரம்தான் இந்த நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்பு, தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் காயத்ரி இருந்துள்ளார்.
இசைக் குடும்பத்தில் பிறந்த 54 வயதான காய்த்ரி, சிறு வயதிலேயே வீணைக் கலைஞராக பரிமளித்தவர். பேபி காயத்ரி என்ற பெயரில் சிறு வயதிலேயே வீணையில் கலக்கியவர்.
உலகின் பல நாடுகளிலும் இவரது வீணையின் நாதம் பரவி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலைமாமணி விருது உள்பட பல விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். மத்தியப் பிரதேச அரசின் குமார் காந்தர்வ் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றவர் காயத்ரி.