மணல் அள்ளி வயிற்றில் அடிக்காதே... நாமக்கல் மக்கள் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: அரசு மணல் குவாரியை மோகனூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆரம்பிக்கக் கூடாது என கிராம மக்கள் பெரும் கூட்டமாகத் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசின் வருவாய் ஆதாரங்களான டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவுத் துறை வருவாய் நீதிமன்ற தீர்ப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு, புதிதாக மணல் குவாரிகளை திறக்க முயற்சி செய்துவருகிறது.

Government decided to open sand quarry and people protested against this

இந்த முடிவை பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் நாமக்கல் மோகனூர் காவிரி ஆற்றுப் படுகையில் மணல் குவாரியைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு மோகனூரைச் சுற்றியுள்ள மூன்று கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அரசின் இந்த முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மோகனூர் பகுதியில் மணல் அள்ளினால் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். மேலும் இப்பகுதி பாலைவனம் போல் ஆகும் நிலைமை ஏற்படும். எனவே மணல் அள்ளக் கூடாது என்று மக்கள் தெரிவித்து உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Namakkal Mohanur, Government decided to open sand quarry and people protested against this.
Please Wait while comments are loading...