For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக்கை... ஹைகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்!

ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார்.

கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.

எனினும் அரசுஊழியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு காட்டியது. மேலும் உடனடியாக பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு

தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு

இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயணா நீதிமன்றத்தில் கூறியதாவது:

அரசு பரிசீலிக்கிறது

அரசு பரிசீலிக்கிறது

அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படுகின்றன.

செப்.30க்குள் அறிக்கை

செப்.30க்குள் அறிக்கை

இது நிதி சார்ந்த விஷயம் என்பதால் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விஜய் நாராயணா கூறினார்.

இடைக்கால உத்தரவு

இடைக்கால உத்தரவு

அப்போது, அறிக்கை தாக்கல் செய்து 2 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிடில் 20 சதவீத நிவாரணம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்த அரசு ஊழியர்கள் இந்த மாத இறுதி வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்.

5 மாத அவகாசம்

5 மாத அவகாசம்

இதனிடயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 5 மாத கால அவகாசம் கோரியது தமிழக அரசு.

English summary
Tamilnadu government said in Madras Highcourt's Madurai bench as government is considering about the demands raised by employees and will file the report about it by september 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X