For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அம்மா" போட்டோவை அந்தாண்டை போடு.. எடப்பாடி போட்டோவைத் தூக்கி எடுப்பா வை.. "லகலக" உத்தரவு!

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை படு வேகமாக மறக்க ஆரம்பித்துள்ளனர் அதிமுக அம்மா தரப்பினர். அவரது புகைப்படங்களை டம்மியாக்கும் உத்தரவு தற்போது படு சூடாக பறந்து கொண்டிருக்கிறதாம.

தமிழகம் முழுவதும் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென ஒரு உத்தரவு கோட்டையிலிருந்து பறந்துள்ளது. ஜெயலலிதாவின் ஃபோட்டோவுக்கு இணையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வைக்குமாறு சொல்லப்பட்டதுதான் அந்த உத்தரவு.

மேலும், கோட்டையிலிருந்தே எடப்பாடியின் அதிகாரபூர்வ புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை மட்டும்தான் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

எடப்பாடி படம்

எடப்பாடி படம்

அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திலும் எடப்பாடியின் படத்தை வைக்க உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஓராண்டு சாதனையின் போது ஜெயலலிதாவை முற்றிலுமாகப் புறக்கணித்திருந்தார் எடப்பாடி.

தூக்கும் உத்தரவு விரைவில்

தூக்கும் உத்தரவு விரைவில்

இப்போது ஜெ.வுக்கு இணையாக படம். சில நாட்கள் கடந்த பிறகு, ஜெயாவிண் படத்தை அகற்றவும் உத்தரவிடுவார் எடப்பாடி என்கிறார்கள்.

அம்மான்னா சும்மாப்பா

அம்மான்னா சும்மாப்பா

ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்தனர் அதிமுகவினர். அமைச்சர்கள் மட்டையாக மடங்கிக் குனிந்தே வாழ்ந்து வந்தனர். இன்று ஜெயலலிதா தூக்கி தூரப் போட்டு வருகின்றனர்.

ஜெயலலிதான்னா யாருப்பா

ஜெயலலிதான்னா யாருப்பா

இப்படியே போனால் விரைவில் ஜெயலலிதாவா, அது யாரு என்று அதிமுக தலைவர்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று ஜெயலலிதாவின் விசுவாசிகளும், ஜெயலலிதா சமாதிக்கு வருவோரும் விரக்தியுடன் கூறுகிறார்கள்.

English summary
Sources say that the Govt of Tamil Nadu has orderd to place CM Edappadi photos prominently in all the govt offices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X