கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும்- எச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிறுமியின் கொலையில் தொடர்புடைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-ஹெச்.ராஜா- வீடியோ

  திருவாரூர்: காஷ்மீரில் கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டுள்ளார்.

  காஷ்மீரில் காட்டு பகுதிக்கு குதிரை மேய்க்க சென்றார் 8 வயது சிறுமி. அந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஒரு கோயிலில் 7 நாட்கள் வைத்திருந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

  பின்னர் 7 நாட்கள் கழித்து அவரது கழுத்தை நெரித்தும் கல்லால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்தனர். 3 மாதங்கள் கழித்து வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

  சிறுவர்களுக்கும் தொடர்பு

  சிறுவர்களுக்கும் தொடர்பு

  இந்த வழக்கில் கோயிலின் அறக்கட்டளை நிர்வாகி சாஞ்சி ராம், அவரது மகன் விஷால், காவல் துறை அதிகாரி தீபக் கஜூரியா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஷால் உள்பட இரு சிறுவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

  எச் ராஜா பேச்சு

  எச் ராஜா பேச்சு

  இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என ஒவ்வொரு குடிமகனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் கூத்தாநல்லூரில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

  நிச்சயம் நடவடிக்கை

  நிச்சயம் நடவடிக்கை

  அப்போது அவர் கூறுகையில் காஷ்மீர் சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம். இதுகுறித்து அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்றவர் கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைத்திருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

  எப்படி முடியும்

  எப்படி முடியும்

  சிறுமியை மயக்கமருந்து கொடுத்து எப்போதும் மயக்கத்திலேயே வைத்திருந்தனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியான நிலையிலும் இதுபோன்று கேட்க ராஜாவால் எப்படி முடிகிறது என்று நெட்டிசன்கள் கொதிக்கின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP National Secretary H.Raja asks how a girl could be kept in the temple which has no doors?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற