சென்னை: கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்று தருகின்றன என்று ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வெ.ரா கூட்டம் மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளதாக எச். ராஜா டுவிட்டரில் கூறியுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்வியோடு சேர்த்து ஒழுக்கமும் கற்றுத் தரப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். மேலும் தானும் ஆர்சி பள்ளியில் படித்த மாணவன் தான் என்றும் அவர் கூறி இருந்தார்.
பள்ளி சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்களை உருவாக்கி பெருமையடைகிறது. இதே போன்று எதிர்காலத்தில் மாணவர்களால் இந்தப் பள்ளி பெருமையடைய வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் கூறி இருந்தார்.
|
எச் ராஜா விமர்சனம்
அமைச்சரின் இந்த பேச்சுக்குத் தான் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் திராவிட புரட்டுப் பூனை வெளியே வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ஈவெரா கூட்டம்
அண்ணாதுரை முதல்வர் ஆனவுடன் பள்ளிகளில் இருந்து நீதிபோதனை வகுப்புகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்தது ஈ.வெ.ரா கூட்டம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ஈ.வெ.ரா கூட்டம் கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்றுத் தருகின்றன என்று கூறி மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளனர்.
|
நடக்கும்
இதே போன்ற தில் இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கரின் கேஸை ஸ்பீடா நடத்துங்கள் என்று மற்றொரு நெட்டிசன் கேளவி கேட்டிருக்கிறார். அதற்கு நடக்கும் என்று பதில் டுவீட்டியுள்ளார் எச். ராஜா.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!