தொப்பியை கழற்றி ஆவேசம்.. காவி துண்டு, விபூதியை பூசி.. மயிலாடுதுறை தெருவில் முதியவரிடம் அத்துமீறல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நடைபெற்ற ஒரு மதப் பிரச்சார சம்பவம், மாவட்டம் முழுவதும் பேசப்படும் பரபரப்பான விவகாரமாக மாறியுள்ளது.. மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், இந்து புரட்சி முன்னணி அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?
மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை கிட்டப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் (66).. கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமிய மதம் தொடர்பான கருத்துகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில், சுற்றுவட்டார கிராமங்களில் நோட்டீஸ் விநியோகம் செய்து மதப் பிரசாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது..

மயிலாடுதுறை இந்து அமைப்பு
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பண்டாரவடை கிராமம், உடையார் தெரு பகுதியில் ஷேக் அலாவுதீன் நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிகுமரன் (48) என்பவர் வந்துள்ளார்..
ஜோதிகுமரன், இந்து புரட்சி முன்னணி அமைப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வருபவர்.. ஷேக் அலாவுதீன் நோட்டீஸ் வழங்குவதை பார்த்ததுமே, அந்த பிரசாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.. "இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஏன் இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்கிறாய்?" என்று கேட்டு ஜோதிகுமரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் அது அத்துமீறலாகவும் மாறியதாக கூறுகிறார்கள்..
தொப்பியை கழற்றி
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஜோதிகுமரன், முதியவர் ஷேக் அலாவுதீன் தலையில் அணிந்திருந்த தொப்பியைப் பலவந்தமாகக் கழற்றினார். பின்னர் தான் வைத்திருந்த விபூதியை எடுத்து அலாவுதீனின் நெற்றியில் பூசி, காவி துண்டை அவரது கழுத்தில் அணிவித்தார். "இனிமேல் இங்கே இஸ்லாமிய மதத்தைப் பற்றிப் பேசக்கூடாது, இந்து மதத்தைத் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும்" என மிரட்டியதுடன், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஷேக் அலாவுதீன், உடனடியாக பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. அதே நேரத்தில், ஜோதிகுமரனும் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது..
ஆனால், ஷேக் அலாவுதீன் புகாரின் அடிப்படையில் மட்டும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 296(b), 196(1), 299, 352, 354, 351(3) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜோதிகுமரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.. பிறகு தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிகுமரனை நீதிபதி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்..
உடையார் தெரு - முதியவர்
ஒரு நபரின் மத அடையாளத்தை வலுக்கட்டாயமாக மாற்றி அச்சுறுத்துவது சட்டப்படி குற்றம் எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.. ஆனால் மற்றொரு தரப்பினரே, மதப்பிரசாரம் செய்த ஷேக் அலாவுதீன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஒருதலைப்பட்சமாக கைது நடந்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஒரு உரிமை, மற்றொரு உரிமையை மிதிக்கும்போது தான் பிரச்சனையே தொடங்குகிறது.. சட்டம் பேச வேண்டிய இடத்தில், வன்முறை பேசினால் விளைவு சிறைதான் என்பதுதான் இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications