For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் பார்க்கும் வேலை பிடிக்கவில்லையா?: அப்போ இதை என்ன சொல்ல

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: என்னடா வேலை என்று சலித்துக் கொள்கிறீர்களா. அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கே உங்களுக்கு தான்.

வேலை பார்க்கும் பலரும் தங்கள் வேலையை விட பிறரின் வேலை நன்றாக இருப்பதாக நினைப்பது வழக்கம். அதனால் கையில் உள்ள வேலையை விரும்பி செய்யாமல் வெறுப்பாக இருப்பார்கள்.

வேலையை பிடிக்காமல் பலர் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு முடிவில் தெரிய வந்துள்ளது. அப்படி செய்யும் வேலையை பிடிக்காதவர்களுக்காகவே இந்த செய்தி. இதை படித்து முடித்த பிறகு நிச்சயம் உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்.

நாய் உணவு

நாய் உணவு

உங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கான உணவை ஒரு மனிதர் சுவைத்து அதை ஓகே சொன்ன பிறகே அது சந்தைக்கு வருகிறது என்று தெரியுமா? அவர் நாயின் உணவை விழுங்க வேண்டியது இல்லை என்றாலும் அதை சுவைக்க வேண்டும். இதற்காக தான் அவருக்கு சம்பளம் தருகிறார்கள்.

பார்ச்சூன் குக்கீ

பார்ச்சூன் குக்கீ

பார்ச்சூன் குக்கீக்குள் இருக்கும் பேப்பரில் எழுதி இருப்பதை பலர் அப்படியே நம்புகிறார்கள். அந்த பேப்பரில் எழுதப்படும் தகவல்களை எழுதுவோரை நிறுவனங்கள் அடிக்கடி மாற்றிவிடும். மக்களை சந்தோஷப்படுத்தும் அவர்களின் வேலை நிலையில்லாதது என்று தெரியுமா? உங்களை சந்தோஷப்படுத்தும் வாக்கியத்தை எழுத அவர்கள் பல மணிநேரம் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொள்வார்கள்.

வரிசையில் நிற்பவர்கள்

வரிசையில் நிற்பவர்கள்

பாஸ்போர்ட் அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், தூதரகங்கள் முன்பு நிற்கும் வரிசையை பார்த்தாலே தலை சுற்றும். வரிசையில் நிற்க விரும்பாதவர்கள் தங்களுக்கு பதிலாக வேறு யாருக்காவது பணம் கொடுத்து நிற்கச் செய்வார்கள். இப்படி பிறருக்காக கால் கடுக்க மணிக்கணக்கில் வரிசையில் நின்று சம்பாதிப்பவர்கள் பெரும்பாலும் பகுதி நேர வேலை பார்க்கும் மாணவர்களும், முதியவர்களும் தான். வயிற்று பிழைப்புக்காக வரிசையில் நிற்பவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள்.

பாம்பு விஷம்

பாம்பு விஷம்

பாம்பின் விஷத்தால் ஆபத்து என்று தெரியும். ஆனால் அந்த விஷமும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதற்காக பாம்பின் வாயில் இருந்து விஷத்தை எடுக்கும் வேலையை செய்பவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். பொறுமை, வேலையில் கவனம் இல்லை என்றால் தாங்கள் எடுக்கும் விஷத்தால் அவர்கள் இறக்க நேரிடும்.

கட்டிப்பிடி

கட்டிப்பிடி

ஜப்பானில் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்ல்(cuddle) காபே திறக்கப்பட்டது. இந்த கபேவில் வேலை பார்க்கும் இளம்பெண்களுக்கு பணம் கொடுத்தால் அவர்களை கட்டிபிடித்து தூங்கலாம். பிறரை கட்டிப்பிடித்து தூங்குவது தான் அந்த பெண்களின் வேலையே என்பது உங்களுக்கு தெரியுமா?

English summary
Do you hate your job?. Read the above article and thank God that you are not doing any of those jobs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X