ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோத நபர்கள் ஊடுருவலா? கமல் சொன்ன 'நச்' பதில்
பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை: தேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.

இப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்).
இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது:
தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான். மேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர்.
இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.
'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள். தமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர்.
என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. "நானே ராவணன்தான்" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன்.
ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு. அமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை.
ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications