For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்ஸார் கோபியை பிப்.11 வரை கைது செய்ய தடை: மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

HC grants anticipatory bail to Essor Gobi
மதுரை: திமுக நிர்வாகி எஸ்ஸார் கோபியை பிப்ரவரி 11ம் தேதிவரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளருமான எஸ்ஸார் கோபியின் மதுரை பண்ணை வீட்டில் சில நாள்களுக்கு முன்பு போலீஸார் சோதனை நடத்தி ஏர்கன் துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றினர். இது தொடர்பாக 'எஸ்ஸார்' கோபி, அவரது சகோதரர், மருது உட்பட, சிலர் மீது, ஆயுத சட்டப் படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 'எஸ்ஸார்' கோபி, மருது ஆகியோர், 'கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில், பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமின் வழங்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி, அருணா ஜெகதீசன் முன், மனு, விசாரணைக்கு வந்தது. நீதிபதி, விசாரணை அதிகாரி, பிப்ரவரி 11ல்,பதில் மனு, தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை, மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என உத்தர விட்டார்.

English summary
The Madurai bench of the Madras high court on Friday granted anticipatory bail to DMK functionary Essor Gobias brother, Maruthu, alias Nalla Maruthu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X