For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறுதி மூச்சு வரை மாணவர்களுக்காகவே வாழ்ந்தவர் கலாம்: நண்பர் பெருமிதம்

By Siva
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கடைசி மூச்சு வரை மாணவர்களுக்காக வாழ்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்று அவரது நண்பர் சம்பத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவை நினைத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாது இந்திய மக்கள் அனைவருமே கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் கலாமுடன் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்த சம்பத் தனது நண்பர் பற்றி பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது சம்பத் கலாம் பற்றி கூறுகையில்,

கல்லூரி

கல்லூரி

நான், கலாம் மற்றும் ஒருவர் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கையில் ஒரே அறையில் தங்கியிருந்தோம். நான் பி.எஸ்.சி. கணிதம் படித்தேன், மற்றொருவர் அறிவியல் படித்துவிட்டு பின்னர் மருத்துவப் படிப்பு படித்தார். கலாமோ பி.எஸ்.சி. இயற்பியல் படித்தார்.

இயற்பியல்

இயற்பியல்

இவர் ஏன் இயற்பியல் படிக்கிறார் என்று நினைத்தோம். பி.எஸ்.சி. முடித்துவிட்டு எம்.எஸ்.சி. படித்து கல்லூரியில் பேராசிரியர் ஆகலாம். அந்த காலத்தில் விண்வெளி ஆய்வு பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது.

விமானி

விமானி

கலாம் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிக்க விரும்பினார். அப்போது தமிழகத்தில் சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் மட்டும் தான் அந்த படிப்பு இருந்தது. அந்த படிப்பை படிக்க அவர் உறுதியாக இருந்தார். கலாம் ஏரோனாட்டிக்கல் என்ஜினியர் அல்லது விமானியாக விரும்பினார்.

மாணவர்கள்

அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்தார். அவரை நான் சந்திப்பதாக இருந்தது. அவர் மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஷில்லாங் சென்றார். கடைசி வரை அவர் மாணவர்களுக்காகவே வாழ்ந்தார் என்றார்.

English summary
Former president Abdul Kalam's friend Sambat told that he lived for students till his last breath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X