பலத்த மழை - பள்ளிக்கரணையில் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பலத்த மழை, போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற இருந்த கமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு பதிலாக கால்வாய்களை வெட்டுங்கள் என்று கடந்த 5 ஆம் தேதி கூறியிருந்தார் கமல்ஹாசன்.

Heavy Rain Kamal birthday function postpone in Pallikarana

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

டுவிட்டரில் கமல்ஹாசன். வேளை வரும் என காத்திருக்காமல் புதுயுகம் செய்வோம் என நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஆவடியில் நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை கமல் தொடக்கி வைத்தார். தொடக்க விழாவில் பேசிய கமல், மழை காலத்தில் மருத்துவ முகாம் மிகவும் அவசியம் என்று பேசினார்.

சென்னையில் காலை முதல் அடையாறு, கிண்டி, சாந்தோம், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வேளச்சேரி முதல் நாரணாயபுரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கரணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்க இருந்தார். பலத்த மழை, போக்குவரத்து நெரிசல் காரணமாக நடிகர் கமல் பள்ளிக்கரணை செல்லவில்லை. மழையால் கமல்ஹாசன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal hassan has postponed his birthday function at Pallikaranai in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற