For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல்... சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் அலை மோதும் கூட்டம்

Google Oneindia Tamil News

நெல்லை: பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழத்தின் அத்தனை முக்கிய நகரங்களிலும் இதே நிலைதான்.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வர எதுவாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Heavy rush seen in cities as Pongal crowd throng bus and railway stations

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்ட தலை நகரங்களுக்கும், நேற்று முன்தினம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று 1325 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இன்று 1175 சிறப்பு பஸ்களும், நாளை 339 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழக பஸ் மட்டுமின்றி தனியார் தனியார் ஆம்னி பேருந்துகளும் சென்னையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டத்துக்கும் என 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகி்ன்றன. மற்ற மாநிலங்களில் இருந்து கடந்த 10ம் தேதி 345 பஸ்களும், நேற்று 750 பஸ்களும், இன்று 760 சிறப்பு பஸ்களும், நாளைக்கு 1220 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

மொத்தம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் மொத்தம் 6514 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வழக்கமாக தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த முறை சிறப்பு ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு இல்லை.இதனால் சிறப்பு ரயில் அறிவிப்பு கனவில் இருந்த மக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். தட்கல் டிக்கெட்டும் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்தில் முடிவடைந்தது.

சென்னையிலிருந்து நெல்லை,தூத்துக்குடி,கன்னியாக்குமரி,உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடுமையான கூட்டம் அலைமோதியது. இதனால் பலர் கழிப்பறை பெட்டியிலும் ,படிகளில் தொங்கியும் நின்றபடியும் ,குழந்தை,குட்டிகளோடு பரிதாப பயணம் செய்தனர்.

தென் மாவட்டங்களுக்கு பொங்கலை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு 56 பேருந்துகளும், மதுரைக்கு 100 பேருந்துகளும், செங்கோட்டைக்கு 10 பேருந்துகளும், நாகர்கோவிலுக்கு 57 பேருந்துகளும், கன்னியாகுமரிக்கு 8 பேருந்துகளும், திருவனந்தபுரத்திற்கு 10 பேருந்துகளும், தூத்துக்குடி 21 பேருந்துகள் என 261 பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து பேருந்துகளும்,ரயிலும் நிரம்பி வழிவதால் பொதுமக்கள் தவித்து வருகி்ன்றனர்.

English summary
Heavy rush was seen in all the cities as Pongal crowd thronged bus and railway stations to reach their destinations to celebrate the festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X