தமிழகம், புதுச்சேரியில் இன்று மிக கனமழை பெய்யும்.. நவ. 4ஆம் தேதி வரை நீடிக்கும்: ஐஎம்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கமே தீவிரமாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Heavy to very heavy rain very likely at isolated places over coastal Tamilnadu & Puducherry and Kerala: Indian meteorological center

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவிலும் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் சென்னை உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக சீர்காழியில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy to very heavy rain very likely at isolated places over coastal Tamilnadu &Puducherry and Kerala; heavy rain at isolated places over interior Tamilnadu and south Coastal Andhra Pradesh said Indian meteorological center.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற