For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி...? திருப்பூர் மாநாடு மதிமுகவிற்கு திருப்புமுனை தருமா??

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. பயணிக்கும் என்பதை திருப்பூர் மாநாடு தெரியப்படுத்தும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழக அரசியலில் மிகப்பெரும் திருப்பத்தினை திருப்பூர் மாநாடு ஏற்படுத்தும். உத்வேகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. மத்திய சென்னை மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். ம.தி.மு.க. சார்பில் திருப்பூரில் அடுத்த மாதம் நடைபெறும் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் ம.தி.மு.க.வினர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பூர் மாநாடு

திருப்பூர் மாநாடு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ம.தி.மு.க. சார்பில் அடுத்த மாதம் 15ம்தேதி திருப்பூரில் மாநாடு நடக்கிறது. தமிழக அரசியலில் மிகப்பெரும் திருப்பத்தினை திருப்பூர் மாநாடு ஏற்படுத்தும். உத்வேகத்தையும், எழுச்சியையும் ஆர்ப்பரிக்கும் விதமாக இந்த மாநாடு அமையும். மாநாட்டில் மலேசியா பினாங்கு துணை முதல்வர் அ.ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்கிறார்.

கண்காட்சி

கண்காட்சி

இந்த மாநாட்டில் ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும் வகையிலும், மதுவிலக்கை வலியுறுத்தி நான் மேற்கொண்ட பிரசாரங்கள், நடவடிக்கைகள் பற்றியும் கண்காட்சி இடம் பெறுகின்றன.

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

கடந்த 13ம்தேதி மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இதற்கான உத்தரவு முதல்வர் வட்டாரத்தில் இருந்து வெளிவந்ததாகவும் தெரியவந்துள்ளது. எங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருட்டு என்றாகி விடாது. தி.மு.க. மாற்றம் வேண்டும் என்று எண்ணும் மக்களின் மனதில் புதிய நம்பிக்கையை எங்கள் கூட்டியக்கம் ஏற்படுத்திவிட்டது என்பது தான் உண்மை என்று வைகோ கூறினார்.

மாணவர் அமைப்புகள்

மாணவர் அமைப்புகள்

பின்னர் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, இலங்கையில் நடத்த படுகொலை குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தன. அடுத்த மாதம் மனித உரிமை கழகத்தில் அதன் அறிக்கை ஆராயப்பட உள்ளது. இதில் இந்தியா எந்தவித ஆக்கப்பூர்வமான முடிவினையும் வெளிக்கொணரவில்லை. எனவே கொலைகாரர்களையே (இலங்கை) தீர்ப்பளிக்க வைக்கக்கூடிய நிலை ஏற்படப்போகிறது என்று தெளிவாகவே தெரிகிறது. இதுதொடர்பாக மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டங்கள் நடத்துவோம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

மதுவிலக்கு அறிவிப்பு

மதுவிலக்கு அறிவிப்பு

சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையில் மதுவிலக்கு தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது உங்களுக்கு ஏமாற்றம் தரவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, இதற்கு நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை, ஏமாறவும் இல்லை என்றார்.

யாருடன் கூட்டணி

யாருடன் கூட்டணி

வருகிற சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு மற்றும் எந்த கட்சியுடன் கூட்டணி? போன்ற விவரங்கள் திருப்பூர் மாநாட்டில் அறிவிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அதற்கு பதிலளித்த வைகோ, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று 4 திசைகள் உள்ளன. இதில் எந்த திசையில் ம.தி.மு.க. பயணிக்கும் என்பதை திருப்பூர் மாநாடு தெரியப்படுத்தும் என்றார்.

English summary
MDMK leader Vaiko has said that his party will make clear about the alliance in its Tirupur conference
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X