மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது.. தமிழிசை சவுந்தரராஜன் பளீச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிடுவதே பாஜகவின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்பதை அதிமுக நிர்வாகிகள் தான் கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

If the govt works against people then it wont continue: Tamilisai

மேலும் தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஸ்டாலினையும் தமிழிசை விளாசினார். ஸ்டாலின் முறையான எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை என்றும் அவ்ர கூறினார்.

தமிழக சட்டசபையில் வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சி தலைவராக மட்டும் ஸ்டாலின் உள்ளார் என்ற அவர் அப்படியே இல்லாமல் முறையாக வழிநடத்தும் எதிர்க்கட்சி தலைவராகவும் ஸ்டாலின் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If the govt works against people then it wont continue says Tamil nadu bjp leader Tamilisai. She also said that the BJP's intention was to be face the local body election in Tamilnadu individually.
Please Wait while comments are loading...