சென்னையில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்... ஹோட்டலில் பிஸ்டலுடன் நால்வர் கைது: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் துப்பாக்கியுடன் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் கள்ளத் துப்பாக்கி விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. சமீபகாலங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

In Chennai four people were arrested for having gun

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தனியார் ஹோட்டலில் நான்கு பேர் துப்பாக்கியுடன் தங்கியிருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து அங்கு வந்த போலீசார் அங்கு ஒரு பிஸ்டல் துப்பாக்கி, 7 குண்டுகளுடன் இருந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Three Youngsters Arrested With Guns in Chennai-Oneindia Tamil

முதற்கட்ட விசாரணையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த பிரகாஷ், குமார் என்றும் மற்ற இருவர் வட சென்னையைச் சேர்ந்த முருகன் மற்றும் கோபிநாத் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Chennai Triplicane 4 people were arrested as they had gun with them illegality .
Please Wait while comments are loading...