For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை - மியான்மர் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

By Mathi
Google Oneindia Tamil News

India-Myanmar container shipping service launched
சென்னை: சென்னை - மியான்மர் இடையே எஸ்சிஐ கமல் என்ற சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய கப்பல் துறை செயலாளர் டாக்டர் விஷ்வபதி திரிவேதி இதைத் தொடங்கிவைத்தார்.

இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், இந்தியா, மியான்மர் நாடுகளுக்கிடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, கிருஷ்ணபட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மியான்மர் நாட்டில் உள்ள யாங்கூன் நகருக்கு சரக்கு கப்பல்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக, ஷிப்பிங் கார்ப்பரேஷனின் ‘எஸ்சிஐ கமல்' என்ற கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கப்பல் போக்குவரத்தின் தொடக்க விழா, சென்னை துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர் முனையத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய கப்பல் துறை செயலாளர் டாக்டர் விஷ்வபதி திரிவேதி இதைத் தொடங்கிவைத்தார்.

சென்னை கண்டெய்னர் டெர்மினல் நிறுவனத்தின் இயக்குனர் என்னராசு கருணேசன், கேப்டன் நருல்லா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

English summary
The Look East Policy of the Central Government got a boost with the launch of India-Myanmar container shipping service at Chennai port. The service, run by the State-owned Shipping Corporation of India (SCI), was launched by Shipping Secretary Vishwapati Trivedi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X