For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்: வெங்கையா நாயுடு

By Mathi
Google Oneindia Tamil News

India should participate in Commonwealth meet: Venkaiah naidu
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு கூறியதாவது:

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்கள் நிலை பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக மக்களின் மன நிலையையும், வெளியுறவுக் கொள்கையையும் கருத்தில் கொண்டு முடிவுகள் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற மாநாடுகளில் பங்கேற்பதன் மூலம்தான் நமது கருத்தை வலியுறுத்த முடியும்.

இலங்கை தமிழர்கள் உரிமை பெற 13-வது அரசியல் சட்டத்தை அமல்படுத்த இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது நல்லது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு இந்திரா காந்தி பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர்.

இதுபோன்று மத்திய அரசின் 450 திட்டங்களுக்கு ஒரே குடும்பத்தின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆனால் தேசிய தலைவர்களின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா ஆட்சிக்கு அமைத்தால் இந்த பெயர்கள் மாற்றப்படும் என்றார்.

English summary
Senior BJP leader Venkaiah naidu on Friday said India should participate the Commonwealth Heads of Government Meeting (CHOGM) to be held in Colombo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X