For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடப் போவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ‘தடா' ஜெ. அப்துல் ரஹீம் அறிவித்துள்ளார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்வதற்காக, அனைத்து முஸ்லீம் கட்சிகளுக்கும் அவர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

Indian National League to contest alone

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லீம் சிறைக்கைதிகளை எந்தக் கட்சி விடுவிடுப்பதாகக் கூறுகிறதோ, அந்தக் கட்சிக்கு ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமும் வாக்களிக்க வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக இருந்தது.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே அவருடைய அழைப்பைப் புறக்கணித்தன.

Indian National League to contest alone

இதனால், முஸ்லீம் சமூகம் பெரும்பான்மையாக இருக்கிற தொகுதிகளில், இந்திய தேசிய லீக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். அத்துடன், மேற்கண்ட கட்சிகள் நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளில், அவர்களுக்கு எதிராக இந்திய தேசிய லீக் கட்சி வேலை செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேரின் விடுதலையை வரவேற்றுள்ள அவர், இதேபோல் முஸ்லீம் சிறைக் கைதிகளையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

English summary
The Indian National League, one of the muslim parties has announced that it would contest its own in the coming assembly elections in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X