டாஸ்மாக் சரக்கு பாட்டிலில் பூச்சி...குடிமகன்கள் அலறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: நாட்றம்பள்ளியில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் 'குடிமகன்' ஒருவர் நேற்று முன்தினம் சரக்கு பாட்டில் வாங்கியுள்ளார்.

பின்னர் பாட்டிலின் மோடியை அவர் திறக்கும் போது பாட்டிலின் உள்ளே கவனித்துள்ளார். பாட்டிலுக்குள் பூச்சிக் கிடைப்பதைக் கண்ட அவர் சேல்ஸ்மேனிடம் அதிர்ச்சியோடு புகார் தெரிவித்துள்ளார். சேல்ஸ்மேனும், டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசரும் 'குடிமகனின்' புகாரைக் கண்டுகொள்ளவில்லை.

Insect found in TASMAC liquor bottle

இதனால் 'குடிமகனுக்கும்' டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் நடந்துள்ளது. விஷயத்தைக் கேள்விப்பட்ட மற்ற டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் கூட்டமாகக் கூடி 'நியாயம்' கேட்டுள்ளனர். ஆனால் விற்ற பாட்டிலை டாஸ்மாக் கடை ஊழியர்கள் வாங்க முற்படவில்லை.

எனவே, இதுகுறித்து வேலூர் கோட்ட கலால் அலுவலர் பிரபு கணேசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு பாட்டிலில் பூச்சி 'குடிமகன்களை' கொந்தளிக்க வைத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Insect found in TASMAC liquor bottle, customers shocked in Vellore
Please Wait while comments are loading...