For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி.-மார்க் 3 ராக்கெட்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மனிதனை விண்ணுக்கு அனுப்ப சோதனை முறையில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை வரும் 18ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். மனிதனை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை தயாரித்துள்ளது.

ISRO to Launch GSLV-Mark III on Dec 18

மனிதனை விண்ணுக்கு அனுப்பி வைக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் சோதனை முறையில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை வரும் 18ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. சோதனை முறையில் அனுப்பப்படுவதால் அதில் மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள்.

கப் கேக் வடிவில் இருக்கும் இந்த ராக்கெட் 630 டன் எடை கொண்டது. அதில் 4 டன் அளவுக்கு ஆட்கள், பொருட்களை அனுப்பி வைக்கலாம். இந்த ராக்கெட் 126 கிமீ வரை செல்லும். அதன் பிறகு அதில் உள்ள ஆட்கள் அமரும் கேப்சூல் மட்டும் தனியாக பிரிந்து வங்கக் கடலில் விழுந்துவிடும். அந்த கேப்சூலை இந்திய கடலோர காவற்படை அல்லது கடற்படை மீட்கும்.

வளிமண்டலத்தின் தன்மை மற்றும் ராக்கெட்டின் ஸ்திரத்தன்மையை சோதனை செய்யவே அது வரும் 18ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த சோதனை முறைக்கு ஆகும் செலவும் ரூ.155 கோடி ஆகும்.

English summary
ISRO will launch Geo-synchronous Satellite Launch Vehicle-Mark III (LVM3 X mission) on December 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X