சசிகலா குடும்பத்தின் போலி நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை: வருமான வரித்துறை விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தின் 10 குழுமங்களைச் சேர்ந்த போலி நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என்பது வருமான வரித்துறை விளக்கம்.

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்குப் பின்னர் ஷெல் கம்பெனிகள் எனப்படும் போலி நிறுவனங்களை மத்திய அரசு கண்டறிந்தது. மொத்தம் 2.1 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு ரத்தும் செய்தது.

IT department checking to find Jaya TV connections with shell companies

மேலும் இத்தகைய டுபாக்கூர் நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்த 1,06, 578 பேரையும் மத்திய அரசு தகுதி நீக்கம் செய்தது. இதில் சசிகலா பெயரில் 4 நிறுவனங்கள் இருந்ததும் அம்பலமானது.

பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அரண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்தி வந்த போலி நிறுவனங்கள். இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா டிவிக்கு தொடர்புடையதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், சசிகலா குடும்பத்தின் 10 குழுமங்களைச் சேர்ந்த போலி நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என விளக்கம் அளித்துள்ளனர். இதில் சசிகலாவின் பெயரிலான நிறுவனங்களும் அடக்கம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Income Tax department is conducting raids at the premises of the Jaya TV in Chennai. Jaya TV is the mouth piece of the AIADMK. Sources say that the raids are being conducted over alleged charges of money laundering. The IT department is also checking to find out if there were any connections with shell companies.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற