பரோலில் வந்து சசிகலா தங்கிய இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து கணவர் நடராஜனைப் பார்க்க பரோலில் வந்து சசிகலா தங்கியிருந்த சென்னை தி.நகரில் இருக்கும் கிருஷ்ணப்பிரியா வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா. கிருஷ்ணப்பிரியா அறக்கட்டளை மற்றும் சில நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

IT officials seized documents from Krishnapriya House

இன்றைய வருமான வரி சோதனைக்கு கிருஷ்ணப்பிரியாவின் வீடும் தப்பவில்லை. அவரது அறக்கட்டளையிலும் சோதனை நடதப்பட்டது. 12 மணிநேரத்துக்கும் மேலான சோதனையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த வீட்டில்தான் கணவர் நடராஜனைப் பார்க்க 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா தங்கியிருந்தார்.

ஆகையால் நிச்சயம் கூடுதல் ஆவணங்கள் இங்கு இருக்கலாம் என்பதால் மும்முரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Income-Tax officials searched on the premises of the Ilavarasi daughter Krishnapriya House in Chennai and led to the seizure of several documents.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற