சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் மீண்டும் சோதனை... இதுதான் காரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிடாஸ் ஆலை உட்பட ஆறு இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சரியாக ஒரு மாதத்திற்கு முன் சசிகலாவிற்கு நெருக்கமாக இருக்கும் பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நேர்த்தில் 200க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. ஐந்து நாட்களாக இந்த சோதனை நடந்தது.

IT raid again in Sasikala relation properties

தற்போது மிடாஸ் உள்ளிட்ட 12 இடங்களில் மீண்டும் சோதனை தொடங்கி இருக்கிறது. மேலும் சசிகலா உறவினர்கள் சிலர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட போது அதிகாரிகளுக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருக்கிறது. இந்த ஆவணங்களை வைத்தே இந்த புதிய சோதனை தொடங்கி இருக்கிறது.

சென்ற முறை நடந்த வருமான வரித்துறை சோதனையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சோதனை நாளையும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Income Tax officials starts to raid once again in Sasikala relation's properties.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற